முயற்சி செய்...
இதயத்தில் வலிமையிருந்தால்
இமயத்தில் ஏறலாம்,
முடியாதென்று முடங்கினால்-அங்கே
முடிந்தேவிடும் உன்கதை...
முடியும் என்றே
முயன்று தோற்றிடு,
முடியாது என்றால்
பயின்று வென்றிடு...!
பட்டைத் தீட்டினால்தான்
வைரம்கூட மின்னும்,
அடிமேல் அடித்தால்தான்
தங்கமும் ஜொலிக்கும்...!
கல்லாய் அவனுன்னை
படைத்து விட்டான்,
உன்னை செதுக்கிட-எந்த
சிற்பிதான் வேண்டும்...?
உன்னை நீயே
செதுக்கி விடு...!
சிலை ஆகிடு-இல்லை
சிற்பி ஆகிடு...!
பரமபதத்தில் பாம்பு
விழுங்கி விட்டால்,
ஏணியை நினைத்து
விளையாடுவது இல்லையா...?
இதுவும் பரமபதம்தான்...
சில மனிதர்கள் பாம்பாய்,
சில மனிதர்கள் ஏணியாய்,
வாழ்கையென்பது இதுவே...!
வஞ்சனை இல்லாமல்
வாழ கற்றுக்கொள்,
வாழ்கை போட்டிதான்
என்பதையும் மறவாதே...
வீழ்ச்சி இல்லாமல்-என்றும்
எழுச்சி இல்லை,
தோல்வி இல்லாமல்-இன்றும்
வெற்றி இல்லை...!
சருகாய் விழுந்தால்
நாளை உரமாகலாம்...!
விதையாய் விழுந்தால்
நாளை மரமாகலாம்...!
எப்படி விழுவதென்று
நீயே முடிவுசெய்...
இனிதான் இருக்கு-ஓர்
அழகாக பயணம்...!
தோல்வியை கூட
வெற்றியாய் நினை,
அதுவேதான் உனக்கு-முதல்
வெற்றியும் கூட...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பொழுதுகளை உங்கள் வசமாக்கி,
கருத்துகளை பதிவின் வசமாக்கி
செல்லும் வாசகர்களுக்கு நன்றிகள்...!
ஒவ்வொரு பதிவுக்கும் கருத்துகளை
எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பேன்.