வெள்ளி, 25 செப்டம்பர், 2020

Poonthotta Kavithaikaran அறிமுகம்...

 அறிமுகம்



Poonthotta Kavithaikaran
Poonthotta Kavithaikaran


மறக்கவும் முடியாத

மறுக்கவும் முடியாத

அந்நாள் ஜூலை 20 (1993)

இக்கவிஞனின் பிறப்பு...!


அன்பான வளர்ப்பு,

அழகான வளர்ச்சி,

ஆறாம் ஆண்டில்

கல்வியின் தொடர்ச்சி...


சிங்கார நடையோடு

சின்னச்சின்ன குறும்புகள்

குழந்தைகளோடு குழந்தையாய்

குதுகலித்தத் தருணம்...!


முதல்நாள் அழுகை

ஆறுதலுக்கு அனு,

ஆண் நண்பன்தான்

பயங்கர சேட்டை...!


குட்டி நண்பர்களோடு

முதலாம் , இரண்டாம்,

மூன்றாம் வகுப்பென

வெற்றிநடை தான்,


ஐந்தாம் ஆண்டுதான்

முடிந்தே போனது...

அருகில் அமரும்

அருமையான நட்பும்...!


ஆறாம் ஆண்டில்

எனக்கு அரும்பிய சேட்டை,

படிப்பிலும் நான்

விட்டுவிட்டேன் கோட்டை ,


ஏழாம் ஆண்டு

ஏற இறங்க பார்த்து

ஏழாம் வகுப்பும்

மாபெரும் வெற்றி...!


எட்டாம் ஆண்டு

காலாண்டு தேர்வு,

அங்கே முதல் முடக்கம்

பின்னர் வேலை தொடக்கம்...


வெயிலும் மழையும்

அறியாத வேலை...!

காற்றாடி அடியில்

கற்கும் வேலை...!


வெட்டியும் தைக்கலாம்,

தைத்தும் வெட்டலாம்,

வேதனையில்ல வேலை

அங்கேதான் தொடக்கம்...


தேவைக்கு உபயோகிக்கும்

உலகம் அல்லவா...?

அப்போது தெரியவில்லை,

தெரிந்தாலும் புரியவில்லை...


தொடக்கத்தில் அங்கும்

ஒரு முடக்கம்,

இடைவெளி இல்லாமல்

இன்னொரு தொடக்கம்..


அப்போது அகவை

கண்டு பதிமூன்றாண்டு,

விளையாட்டுப் பருவத்தில்

பார்த்ததெல்லாம் வினையாச்சு...


அங்கேயும் முடக்கமே

வெற்றி கண்டது...

வேடிக்கை உலகத்தில்

நானும் ஒரு வேடிக்கையாளியே...!


புரியாத வயதல்லவா...?

எதுவுமே புரியவில்லை...

பின்னர் தொடர்ந்தேன்

புரியாத பயணம் தேடி...


சிலவற்றை கற்றேன்

பலவற்றை கற்க முயன்றேன்

முயன்று தோற்றேன்,

ஒருநாள் வெற்றி கண்டேன்...


வெட்டியின் தொடக்கமே

வேதனையின் மறுதொடக்கம்

அகவை ஆண்டு

அப்போது பதினெட்டு...!


அழகான மாலை

வளைந்த சாலை

ஓடும் பேருந்து

இருசக்கர வண்டி...!


இரண்டும் மோதல்

நானும் கொஞ்சம் அடிகளோடு

கால்கள் முறிய கத்தும்

சத்தம் காதுகளை கிழிக்க...!


ஊரே திரள

இறப்பின் நகலை

அங்கே கண்டேன்

அம்மாவின் அழுகையில்...!


அவசர ஊர்தி

தாமதம் ஆக

குருதியின் சகதியில்

அனைவரும் பயப்பட ...


மயக்கம் கொண்டேன்

வேதனையின் உச்சம் கண்டேன்,

பின்னர் நான்காண்டு

தனிமை கண்டேன்...!


தனிமையில் இனிமையான

தமிழை கண்டு,

பொழுது போக்காக

வரிகள் படைத்தேன்,


வரிகளை கண்டு

கருத்துக்கள் பகிர்ந்தாள்

இணையத்தில் இதயம்

தந்த இணையக் காதலி...


காதலின் பயணம்

மூன்றாண்டு தழுவ,

என் கவிதைகளும்

என்னை ஆரத் தழுவ...


அவளோ நிச்சயமென்றாள்

வீட்டில் பேச முயன்றேன்,

அவளோ வேண்டாமென்றாள்

காதலை நானே தூக்கியெறிந்தேன்...


கற்பனைகளின் கலவைகொண்டு 

கட்டிவைத்தேன் காதல் வீடு,

அங்கேதான் கவிஞனென்று

கவிதை தொடர்ந்தேன்....


பலவண்ணப் பூக்களை

கற்பனை உலகத்திலே,

பறிக்காமல் அவைகளுக்கு

பூந்தோட்ட கவிதைக்காரனானேன்...


கவிதைகளுக்கு ஆயுதமாய்

காதலை எடுத்தேன்,

தனிமையின் வரிகளை

தாராளமாய் தொட்டேன்...


வேடிக்கை என்னவென்றால்

ஒவ்வொரு வெற்றியும்

முடக்கப் படுவதும்-சிலரால்

கவிதைத் திருடப்படுவதும்தான்...


கவிஞனின் கனவுதான்

என்னவென்று தெரியுமா...?

படைப்புகளை ரசிக்க

பார்ப்பவர் தேவை,


பார்ப்பவர் புரிந்து

கருத்திட வேண்டும்,

வரிகளை ரசித்து

வாழ்த்திட வேண்டும்...


இது கனவென்று

சொன்னேனே தவிர,

இது கனவல்ல

மாபெரும் உண்மை...


நான் வாழ்ந்த

வாழ்க்கைக்கு ஆதாரமாய்

என் கவிதைகளை

விட்டுச்செல்ல முயன்றேன்,


மீண்டும் விழுந்தேன்,

விழுவதும்,எழுவதும்

இன்றும்,என்றும் 

எனக்கு புதிதில்லையே...!


ஒவ்வொரு முறை

விழும்போதும் வேதனைதான்,

வேதனையோடு எழுந்தால்தான்

சாதனையின் வலி புரியும்...


இந்த கவிஞனின்

முடக்கம்,தொடக்கம்,

வீழ்ச்சி,எழுச்சி

உங்களை ஊக்குவிக்கும்...!


போராட்டக்களம் இல்லாமலே

போராட வேண்டும்

பிறப்புக்கும் இறப்புக்கும்

நடுவிலே நாமனைவரும்...!


இதுதான் இக்விஞனின்

முயற்சியும்,தொடர்ச்சியும்...


காணொளி குரல்பதிவு...!


-கவிஞர் பூந்தோட்ட கவிதைக்காரன்