திங்கள், 19 அக்டோபர், 2020

காதல் நிச்சயிக்கப்பட்டது...

காதல் நிச்சயிக்கப்பட்டது


டமாடும் சிலையே உனை

செதுக்கி வைத்தது யாரோ...!

உன் வசீகர விழிகளால்-எனை

உன் வசமாக்கி விட்டாயே...!


அங்கங்க ளெல்லாம் காந்த

விசை வாங்கி வந்தாயோ...!

வீதியில் உலவும் விழியெல்லாம்

வியந்து உனைப் பார்கிறதே...!


அழகான உன்மேனி கண்டு

அழலாடிப் போகிறது மனம்,

கடைக்கண் பார்வை கொண்டு-எனை

காற்றாடியாய் சுற்ற விடாதே...!


உந்தன் அழகு புருவங்களோ

எந்தன் உருவத்தை சாய்க்குது,

அதன் கீழுள்ள விழிகளோ

எந்தன் வீழ்ச்சிகாண இமைக்குது...


உன் கன்னங்கள் இரண்டுமே

பல எண்ணங்களை பேசுது,

அதை தொட்டுக் கொள்ள-நான்

வந்தாலோ கைவிரல்கள் கூசுது...!


உதடுகளோ முணு முணுக்குது

மொழிப்பெயர்க்க நினைக்கிறேன்,

எந்தன் காதல் உலகத்திலே

உலக மொழியாக அறிவித்திட...


அதிரூபியே என் அழகானவளே

இதயத்தாழ் திறக்க வா...

நீமட்டும் அதனுள் நுழைந்து

மீண்டும் தாழ்களை பூட்டிடு...!


அடி பஞ்சவர்ணக் கிளியே

நெஞ்சு பஞ்சுதான் கொத்தாதே...

உன் விழிகளின் சூட்டினில்-அதை

பற்ற வைத்துப் போகாதே...


கடிகார நொடி முள்ளாய்

நெடுநேரம் சுற்ற விடுகிறாய்,

மனம் களைப்பே இல்லாமல்

சுற்றிக் கொண்டே இளைப்பாறுது...!


உறக்கம் இல்லையடி பெண்ணே

உன்னை கண்ட நாள்முதல்...

உன்னை உளமாற ஏற்றேன்-நம்

காதலை நிச்சயித்த நாள்முதல்…



-Poonthotta Kavithaikaran

2 கருத்துகள்:

பொழுதுகளை உங்கள் வசமாக்கி,
கருத்துகளை பதிவின் வசமாக்கி
செல்லும் வாசகர்களுக்கு நன்றிகள்...!
ஒவ்வொரு பதிவுக்கும் கருத்துகளை
எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பேன்.